தமிழகம்

இந்தியாவில் முதல்முறையாக கீழச்சேரி கிராமத்தை தத்தெடுத்த சென்னை அரசு பொது மருத்துவமனை

செய்திப்பிரிவு

கல்லீரல் நோய் இல்லாத கிராமமாக மாற்ற திட்டம்

இந்தியாவில் முதல் முறையாக சென்னை அரசு பொது மருத்து வமனை கல்லீரல் மருத்துவத் துறை திருவள்ளூர் மாவட்டத் தில் உள்ள ‘கீழச்சேரி’ என்ற கிராமத்தைத் தத்தெடுத்துள்ளது. இந்தியாவுக்கே முன்மாதிரியாக கல்லீரல் நோய் இல்லாத கிரா மத்தை உருவாக்கவே கீழச்சேரி கிராமத்தை மருத்துவமனை தத்தெடுத்துள்ளது.

இதுகுறித்து அரசு பொது மருத் துவமனை கல்லீரல் மருத்துவத் துறை தலைவர் டாக்டர் கே.நா ராயணசாமி கூறியதாவது:

இந்தியாவில் கல்லீரல் அழற்சி நோயால் (ஹெபடைடிஸ் பி) மொத்த மக்கள்தொகையில் 2 முதல் 7 சதவீதமும், தமிழகத்தில் 2 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டு இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கல்லீரல் நோய்க்கு அறிகுறிகள் தெரியாது. தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் கல்லீரல் நோய் வராமல் தடுக்கலாம்.

இலவச பரிசோதனை

உலக கல்லீரல் அழற்சி தினம் கடந்த 28-ம் தேதி கடை பிடிக்கப்பட்டது.இந்த ஆண்டின் கருப்பொருள் கல்லீரல் நோய் இல்லாமல் (NO HEP) என்பதா கும். இந்தியாவிலேயே முன் முயற்சியாக கீழச்சேரி கிராமத் தைத் தத்தெடுத்து இருக்கிறோம். இந்த கிராமத்தில் 5 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்.

ஒவ்வொரு மாதத்திலும் கடைசி வியாழக்கிழமை என்னு டைய தலைமையில் 10 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர் கிராமத்துக்கு சென்று மக்களுக்கு கல்லீரல் நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். இலவசமாக மக்களுக்கு பரிசோ தனை செய்யப்படும். பரிசோத னையில் யாருக்காவது கல்லீரல் நோய் இருந்தால், அவர்களுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத் தப்படும்.

கல்லீரல் நோய் இல்லாதவர்க ளுக்கு முதலில் ஒரு தடுப்பூசியும், 2-வது மற்றும் 6-வது மாதத்தில் அடுத்தடுத்து தடுப்பூசிகளும் போடப்படும். இதன் மூலம் கல்லீரல் நோய் வராமல் தடுக்க முடியும். இது 5 ஆண்டு திட்டமா கும். கீழச்சேரி கிராமத்தை கல் லீரல் நோய் இல்லாத கிராமமாக மாற்றுவதே எங்களின் நோக்கம் ஆகும் என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT