எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி பெற்றதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப் பின்போது நடைபெற்ற வன்முறை யும், ஜனநாயக படுகொலை யும் கடுமையாக கண்டிக்கத்தக் கவை. இதற்காக 2 கட்சிகளும் வெட்கப்பட வேண்டும். சட்டப் பேரவையில் நடைபெற்ற நம் பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி பெற் றது சட்டப்படி வேண்டுமானால் செல்லுபடியாகும். ஆனால், அதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.
ஏராளமான ஊழல் குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள எடப் பாடி பழனிசாமியால் மக்கள் நலன் காக்கும் நிர்வாகத்தை நடத்த முடியாது. நம்பிக்கை வாக்கு கோரும் விஷயத்தில் பேரவைத் தலைவரின் நடவடிக்கைகளும் கண்டனத்துக்கு உரியவை. ஆளும்கட்சி உறுப்பினர்கள் கடத்திச் சென்று சிறைவைக்கப் பட்ட நிலையில், குதிரை பேரம் நடப்பதை தடுக்க ஆளுநர் நட வடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதேபோல், ரகசிய வாக்கெடுப்பு நடத்த பேரவைத் தலைவருக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் சட்டப்பேரவையில் இத்தகைய அநாகரிகமான நிகழ்வுகள் அரங்கேறியிருக்காது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.