முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தின்போது தொடரப்பட்ட 2 அவதூறு வழக்குகளின் விசாரணைக்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.
முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதல்வர் கருணாநிதியை அவதூறு செய்யும் விதத்தில் வைகோ கருத்துகளை வெளியிட்டதாகக் கூறி, இரண்டு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. சென்னை ஏழாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை நடந்து வருகி றது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி கோமதி ஜெயம் முன்னிலையில் நேற்று விசார ணைக்கு வந்தது.
அப்போது வைகோ நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதத் துக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.