தமிழகம்

காராமணி வடை

ப்ரதிமா

என்னென்ன தேவை?

உடைத்த காராமணி - 2 கப்

அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

காய்ந்த மிளகாய் - 3

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

இஞ்சி- ஒரு சிறிய துண்டு

மிளகுத் தூள்- ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

காராமணியை அரைமணி நேரம் ஊறவைத்து, தோலை நீக்கி, உப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்து நைஸாக அரையுங்கள். அரைத்த மாவுடன் அரிசி மாவு, பொடியாக நறுக்கிய இஞ்சி, மிளகுத் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து நன்றாகப் பிசையுங்கள். பிசைந்த மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள். (காராமணியை ஒன்றிரண்டாகப் பொடித்து வைத்துக்கொண்டால் வடை, பொரியல், குருமா, பிரியாணி போன்றவற்றில் சேர்த்தால் சுவை கூடும்.)

SCROLL FOR NEXT