தமிழகம்

தமிழகத்தில் ஜிகாதிகளின் தாக்குதல் அதிகரிப்பு: பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளர் புகார்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஜிகாதிகளின் தாக்கு தல்கள் அதிகரித்து வருவதாக பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ் ராமேசுவரத்தில் தெரிவித்தார்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளர் முரளிதரராவ் தனது குடும்பத்துடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியாவில் மோடி தலைமையிலான ஆட்சி எப்போதும் நடக்க வேண்டும் என வழிபாடு செய்தேன். நேற்று முன்தினம் ராமநாதபுரத்தில் பாஜக பிரமுகர் அஸ்வினும், அவரது தந்தையும் ஜிகாதிகளால் தாக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஜிகாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

தமிழக அரசை மத்திய அரசு மறைமுகமாக இயக்குவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டுவது பொய்யானது என்றார்.

SCROLL FOR NEXT