தமிழகம்

கூடுவாஞ்சேரியில் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு: 5 ஆண்டுகளாக முடியாத ரயில்வே மேம்பால பணிகள்- மழைக்காலத்துக்குள் முடிக்கப்படுமா?

ஜெ.கு.லிஸ்பன் குமார்

தாம்பரத்தை அடுத்த கூடுவாஞ்சேரி யில் ரயில்வே மேம்பாலம் மற்றும் வாகன சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் 5 ஆண்டுகளாக நிறைவடையாமல் உள்ளன. இதனால் மாடம்பாக்கம் பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்.

சென்னையை அடுத்த கூடுவாஞ் சேரி ரயில் நிலையத்துக்கு அருகே மாடம்பாக்கம், ஆதனூர், குத்தனூர், காவனூர் உள்ளிட்ட பல ஊர்கள் உள்ளன. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள் ளன. இங்குள்ள மக்கள், பிற பகுதிகளுக்கு செல்ல ரயில்வே கேட்டை கடந்து செல்லவேண்டி உள்ளது. இதையடுத்து, மாடம் பாக்கம் பகுதியையும், கூடுவாஞ் சேரி ஜிஎஸ்டி சாலையையும் இணைக்கும் வகையில் ரயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு ரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டது. இப்பணியை 2 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டது.

ஆரம்ப கட்ட பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், மேம்பால பணிகளுக்காக கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் மாடம்பாக்கம் - கூடுவாஞ்சேரி சாலை, ரயில்வே துறையால் மூடப்பட்டது. மேம்பாலத்துக்கு கீழே வாகன சுரங்கப்பாதை அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. அதன் அருகே பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் சென்றுவருவதற்காக சிறிய சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. மழைக்காலங்களில் இந்த சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்குவதால் பாதியளவு தண்ணீரில் மூழ்கிய படிதான் அந்த சுரங்கப்பாதையில் சென்றாக வேண்டும்.

மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி 5 ஆண்டுகள் ஆகியும் இப்பணி முடியாமல் தொடர்ந்து வருவதால் மாடம்பாக்கம் பகுதி மக்கள் அவதிப்படுகிறார்கள். இரு சக்கர வாகன ஓட்டிகளாவது தற்காலிக சுரங்கப்பாதையை பயன்படுத்தி கூடுவாஞ்சேரிக்கு சென்றுவிடுகிறார்கள். ஆனால் பிற வாகனங்களில் செல்லும் பொதுமக்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. அவர்கள் 7 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றிச் செல்லவேண்டி உள்ளது.

இதுகுறித்து மாடம்பாக்கம் ராகவேந்திரா நகரைச் சேர்ந்த முரளிதரன் என்பவர் கூறும்போது, “மேம்பாலப் பணிகள் காரணமாக ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கூடுவாஞ்சேரிக்கு 7 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லவேண்டி உள்ளது. இதனால் நோயாளிகள் மற்றும் வயதானவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.

காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து அதிகமாக இருக்கும்போது சுரங்கப்பாதை வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வதற்கும் கஷ்டமாக உள்ளது. மாற்றுப்பாதையில் சுற்றிச்செல்ல வேண்டியுள்ளதால் ஆட்டோக்காரர் களும் அதிக கட்டணம் கேட்கிறார்கள்” என்றார்.

ஆட்டோ டிரைவரான சரவணன் என்பவர் கூறும்போது, “சுரங்கப் பாதை வழியாக அதிகாலை 5 மணி வரைதான் ஆட்டோக்கள் செல்லலாம். அதன்பிறகு அனுமதி கிடையாது. கூடுவாஞ்சேரி செல்ல எந்த மாற்றுப்பாதையாக இருந் தாலும் குறைந்தபட்சம் 7 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லவேண்டி உள்ளது” என்றார்.

கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வரும் மேம்பாலம் மற்றும் சுரங்கப் பாதை பணிகளை மழைக்காலத் துக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்பதே மாடம்பாக்கம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதி மக்க ளின் கோரிக்கையாக உள்ளது.

SCROLL FOR NEXT