விவசாயிகளையும், விவசாயத்தை யும் பாதுகாக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஊர் தோறும் உணவுத் திருவிழா நடப்பட உள்ளது என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசிய தாவது: கடந்த 10 நாட்களாக அதிமுகவைச் சேர்ந்த எந்த சட்டப்பேரவை உறுப்பினர்களும் தொகுதி பக்கம் செல்லவே இல்லை. இதனால் மக்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர்.
விவசாயிகளின் வாழ் வாதாரத்தை உறுதி செய்தால் மட்டுமே நாடு வளர்ச்சி அடையும். தமிழகத்தில் விவசாயிகளையோ, விவசாயத்தையோ எந்த அரசும் பாதுகாப்பதாக தெரியவில்லை.
அந்நிய நாட்டு குளிர்பானங் களுக்கு மாற்றாக உள்ளூரில் கிடைக்கக் கூடிய இளநீர், நுங்கு, பழச்சாறு, சிறுதானியக் கூழ் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்காக ஊர்தோறும் உண வுத் திரு விழாவை நடத்தி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட உள்ளது என்றார்.