தமிழகம்

அதிமுக அரசியல்! - ஆளுநர் முடிவை அறிய ரோசய்யா ஆவல்

செய்திப்பிரிவு

தமிழக ஆளுநரின் முடிவை அறிய ஆவலுடன் இருப்பதாக தமிழக முன்னாள் ஆளுநர் கே.ரோசய்யா தெரிவித்துள்ளார்.

கோவையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக முன்னாள் ஆளுநர் கே.ரோசய்யா நேற்று வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ‘தமிழகத்தில் ஆளுநரிடம் சசிகலாவும், முதல்வர் பன்னீர்செல்வமும் ஆட்சியமைக்க உரிமை கோருவது குறித்து கருத்து எதுவும் கூற முடியாது. ஆனால் இந்த விஷயத்தில் ஆளுநரின் முடிவை அறிய உங்களைப் போலவே நானும் ஆவலுடன் இருக்கிறேன். இது தொடர்பாக இன்றோ (பிப்.12) அல்லது நாளையோ (பிப்.13) கருத்தை தெரிவிக்க வாய்ப்புள்ளது. அவர் சட்டத்துக்கு உட்பட்டு நிதானமாகச் செயல்பட்டு வருகிறார்’ என்றார்.

SCROLL FOR NEXT