தமிழகம்

கூட்டணி பேச்சுவார்த்தை நீடிக்கிறது- மதுரையில் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து அரசியல் கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர் களிடம் திங்கள்கிழமை கூறிய தாவது: தமிழக மீனவர்களின் பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசு தவறி விட்டது. தமிழக மீனவர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமெனில், நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும். இதற் காக தமிழ் இன உணர்வு கொண்ட அனைவரும் ஒன்று சேர வேண்டும்.

பா.ஜ.க. ஒருபோதும் மதவாத கட்சியாக செயல்பட வில்லை. ஆரம்பத்தில் இருந்தே புறந்தள்ளப்பட்ட மக்களுக்காக பா.ஜ.க. பாடுபட்டு வருகிறது. வரும் ஆண்டுகளிலும் தாழ்த்தப் பட்ட, மலைவாழ் மக்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடும்.

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்.

தமிழகத்தில் கொலை, கொள்ளைகள் சர்வ சாதாரண மாக நடைபெற்று வருகின்றன. இவற்றைத் தடுக்க உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர்களாக வானதி சீனிவாசன், முருகா னந்தம், மாநிலச் செயலாளராக கே.பி.ராகவன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

அப்போது மாநில துணைத் தலைவர்கள் சுரேந்திரன், சுப.நாகராஜன், தாழ்த்தப்பட்ட பிரிவு சங்கத் தலைவர் முருகன், மக்க ளவைத் தொகுதி பொறுப்பாளர் சசிராமன் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT