தமிழகம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முன்னாள் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவு

செய்திப்பிரிவு

டிஐஜி பதவி உயர்வு தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால் முன்னாள் உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா 24-ம் தேதி நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சிறைத்துறை டிஐஜி யாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் கண்ணன். இவர், தனது பதவி உயர்வு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரது கோரிக்கையை பரி சீலிக்கும்படி தமிழக உள்துறை செயலாளர் மற்றும் சிறைத்துறை தலைவருக்கு ஏற்கெனவே உத்தர விட்டிருந்தது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி உயர் நீதிமன்றத்தில் கண்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

நீதிபதிகள் கே.கே.சசிதரன், எம்.வி.முரளிதரன் அடங்கிய அமர்வில் இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது இந்த வழக்கில் தமிழக முன்னாள் உள்துறை செயலாளர் அபூர்வவர்மா 24-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்ட நீதி பதிகள், வழக்கு விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளி வைத்தனர்.

SCROLL FOR NEXT