தமிழகம்

தி இந்து தமிழ் நாளிதழின் ‘ஸ்ரீராமானுஜர் 1000’ சிறப்பு மலர் வெளியீடு: ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் வெளியிட்டு வாழ்த்தினார்

செய்திப்பிரிவு

ஸ்ரீராமானுஜரின் 1000-வது பிறந்த ஆண்டின் முன்னோட்டமாக ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் தயாரித்துள்ள ‘ஸ்ரீராமானுஜர் 1000’ சிறப்பு மலரை ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் நேற்று வெளியிட்டு ஆசி கூறினார்.

ஸ்ரீராமானுஜரின் 1000-வது பிறந்த ஆண்டின் முன்னோட்டமாக ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ‘ஸ்ரீராமா னுஜர் 1000’ என்ற சிறப்பு மலரை தயாரித்துள்ளது. இந்த சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரம வளாகத் தில் நேற்று நடந்தது. சிறப்பு மலரை ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீரங்க ராமானுஜ மகாதேசிகன் சுவாமி வெளியிட, முனைவர் இரா.அரங்கராஜன் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

‘ஸ்ரீராமானுஜர் 1000’ சிறப்பு மலரில் ராமானுஜரின் சமத்துவ நோக்கம், தத்துவம், ஆன்மிக சிந் தனைகள் என பல பரிமாணங் களையும் விவரிக்கும் அறிஞர் களின் கட்டுரைகள், கருத்துகள், படைப்புகள் விரிவாகவும் ஆழமாகவும் இடம்பெற்றுள்ளன. அஹோபிலம் ஜீயர் ஆசியுரை, எம்பார் ஜீயர் நேர்காணல் ஆகி யவையும் இடம்பெற்றுள்ளன.

ஸ்ரீராமானுஜர் பற்றி காஞ்சி மகா பெரியவர் எழுதியிருக்கும் கருத்துகளில் ராமானுஜரின் வாழ்க்கைச் சித்திரமும் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் எளிமை யும் பெருமையும் நம் கண்முன் தரிசனமாகின்றன.

சாண்டில்யன், இந்திரா பார்த்த சாரதி, எஸ் கோகுலாச்சாரி, இளங் கண்ணன், மாலோல கண்ணன், எம்.என்.ஸ்ரீநிவாசன், திருப்பூர் கிருஷ்ணன் உள்ளிட்ட படைப்பாளி களின் படைப்புகளும் மலரில் இடம் பெற்றுள்ளன. ‘தீண்டாமையை எதிர்த்த தீரர்’, ‘ராமானுஜர் தரிசித்த திருக்கோயில்கள்’ என பல தலைப்புகளிலும் ராமானுஜரின் வாழ்வின் முக்கிய தருணங்கள் இதில் பதிவாகி இருக்கின்றன.

மகான் ராமானுஜர் இந்தப் பூமியில் பாய்ச்சிய ஆன்மிக வெளிச்சம், இந்த சிறப்பு மலரில் ஒளிப் பக்கங்களாக விரிந்திருக் கின்றன. ஸ்ரீராமானுஜரின் அழகிய வண்ணப்பட இணைப்புடன் ரூ.90 விலையில் வெளிவந்துள்ள ‘ஸ்ரீராமானுஜர் 1000’ சிறப்பு மலர் 104 பக்கங்கள் கொண்டதாகும்.

SCROLL FOR NEXT