தமிழகம்

மறைமலை நகரில் பூட்டை உடைத்து 50 சவரன் கொள்ளை

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலை நகர் அடுத்த காந்தி நகர், செளபாக்யா குடியிருப்பில் வசிப் பவர் முகம்மது அலிஜின்னா.

தனியார் தொழிற்சாலையில் மென் பொருள் பொறியாளராக பணி புரிந்து வருகிறார். இவருடைய மனைவி ஹசினாபானு. இவர் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு, பக்கத்து வீட்டுக்கு சென்றார்.

பின்னர், பத்து நிமிடங்களுக்குப் பிறகு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பீரோவில் இருந்த 50 சவரன் நகை ரூ. 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது.

இதுகுறித்து, தகவல் அறிந்த மறைமலைநகர் போலீ ஸார் வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT