தமிழகத்தில் 356-வது சட்டப் பிரிவை அமல்படுத்த சூழ்ச்சி நடைபெறுவதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''எது நடக்கக் கூடாது என்று கடந்த மாதம் முதலேயே வற்புறுத்தி விளக்கினோமோ, அது நடந்தே விட்டது என்பது வேதனைக்குரியது. நிலையான ஆட்சிக்குப் பெயர் போன தமிழ்நாடு, இன்று பிளவுப்பட்டு நிற்கிறது.
அதிமுகவில் சசிகலா தரப்போ அல்லது பன்னீர்செல்வம் தரப்போ, பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால், ஆறு மாதத்திற்கு சட்டப்பேரவை முடக்கி வைக்க, ஆளுநர் உத்தரவிடும் வாய்ப்பு உள்ளது. அடுத்த பெரிய கட்சியான திமுகவை ஆட்சி அமைக்க, அவர் அழைக்க மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டை இந்த நிலைக்கு கொண்டு போகலாமா? ஆகவே, அனைவரும் நடுநிலையோடு சிந்திக்க வேண்டும்'' என்று வீரமணி கூறியுள்ளார்.