தமிழகம்

போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படுமா? - அமைச்சர் தலைமையில் இன்று இறுதிகட்ட பேச்சுவார்த்தை

செய்திப்பிரிவு

போக்குவரத்து கழக ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை யில் இன்று இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறது. இதில் உடன்பாடு ஏற்படாவிட்டால், ஏற் கெனவே அறிவித்தபடி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித் துள்ளன.

தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர் நலத்துறை தனி ஆணையர் யாஸ்மின் பேகம் முன்னிலையில் 2-வது நாளாக நேற்றும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில், நிர்வாகம் தரப்பில் மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, போக்குவரத்து துறை தனி அலுவலர் கோவிந்தராஜ் உட்பட 8 பேரும், தொழிற்சங்கங்கள் தரப்பில் மு.சண்முகம் (தொமுச), கி.நடராஜன் (தொமுச), ஆறுமுக நயினார் (சிஐடியு), சந்திரன் (சிஐடியு), ஜெ.லட்சுமணன் (ஏஐடியுசி) உட்பட 47 சங்கங்களின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். சுமார் 2 மணிநேரம் பேச்சுவார்த்தை நடந்தது. இதிலும் முக்கிய முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

‘உங்கள் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. எனவே, தொடர்ந்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தொழிற்சங்கங்கள் முன்வர வேண்டும். பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் வேலைநிறுத்தப் போராட்ட அறி விப்பை வாபஸ் பெற வேண்டும்’ என்று தொழிலாளர் நலத்துறை தனி ஆணையர் யாஸ்மின் பேகம் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கிடையே, தொழிற்சங்கங் களின் நிலைபாடு குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் சின்னசாமி ஆகியோர் தமிழக முதல்வர் கே.பழனிசாமியுடன் தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினர். பின்னர், நேற்று மாலையில் மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது. முதல்வர் தெரிவித்த வாக்கு றுதிகள் பற்றி தொழிற்சங்கங்களிடம் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை பல்லவன் இல்லத்தில் தொழிற்சங் கங்களுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இதுதொடர்பாக அண்ணா தொழிற்சங்க பேரவையின் செய லாளர் சின்னசாமி கூறியபோது, ‘‘போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக ரூ.750 கோடி ஒதுக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இது போதாது என தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் கோரிக்கை கள் குறித்து முதல்வரிடம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நியாயமான, முக்கிய கோரிக்கை களை முதல்வர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என்றார்.

தொமுச பொதுச் செயலாளர் மு.சண்முகம் கூறியதாவது:

தொழிலாளர் நலத்துறை தனி ஆணையர் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி னோம்.

முதல்கட்டமாக ரூ.750 கோடி ஒதுக்கப்படுவதாக தெரிவித் தனர். இதில், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ரூ.250 கோடி ஒதுக்கியுள்ளதாகவும், எஞ்சிய ரூ.500 கோடியை 3 மாதங்களில் வழங்குவதாகவும் தெரிவித்துள்ள னர். அந்த தொகை எப்போது வரும் என்பதை அரசாணையாக வெளி யிடவேண்டும் என்று வலியுறுத்தி னோம்.

எங்கள் கோரிக்கைகளை முதல் வரிடம் தெரிவித்திருப்பதாகவும், 14-ம் தேதி (இன்று) பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறியுள்ளனர். இதில் எங்களது முக்கிய கோரிக் கைகளை ஏற்காவிட்டால், ஏற் கெனவே அறிவித்தபடி 15-ம் தேதி (நாளை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT