தமிழ் ஸ்டுடியோ அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சிறுவர்களின் திரைப்பட ரசனையை வளர்க்கும் விதமாக தமிழ் ஸ்டுடியோ மற்றும் சாதனா நாலெட்ஜ் பார்க் இணைந்து நடத்தும், சிறுவர்களுக்கான திரைப்பட விழா ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை சென்னை கே.கே. நகரில் உள்ள நாலெட்ஜ் பார்க் அரங்கில் நடைபெற்று வருகிறது.
இந்த மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையான அக்டோபர் 5-ம் தேதி மாலை 5.30 மணிக்கு ஆமிர்கான் இயக்கத்தில் வெளியான ‘தாரே சமீன் பர்’ திரைப் படம் திரையிடப்பட உள்ளது.
இதைக்காண அனுமதி இலவசம். மேலும் விவரங்களுக்கு 7299855111, 9840698236 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.