தமிழகம்

சுவாதி கொலை வழக்கில் ஆதாரங்களை திரட்ட மேன்ஷனில் போலீஸார் தீவிர விசாரணை

எம்.மணிகண்டன்

சுவாதி கொலை வழக்கில் ஆதாரங்களை திரட்ட சென்னை சூளைமேடு ஏ.எஸ்.மேன்ஷனில் தங்கியுள்ளவர்களிடம் போலீ ஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவாதி கொலை வழக்கில் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவரை போலீஸார் கடந்த 1-ம் தேதி கைது செய்தனர்.

ராம்குமாரின் கழுத்தில் உள்ள காயம் ஆறாததால், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுவாதியுடன் பழக முடியாத விரக்தியில்தான் அவரை ராம்குமார் கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், “சுவாதியை ராம்குமார் கொலை செய்யவில்லை. ராம்குமார் ஒரு அப்பாவி” என்று கூறி ராம்குமார் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சூழலில் ராம்குமாருக்கு ஆதரவாக ஆஜராகியிருந்த வழக் கறிஞர் ஜி.கிருஷ்ணமூர்த்தி, தனக்கு பல்வேறு அழுத்தங்கள் வருவதாக கூறி வழக்கில் இருந்து விலகினார். இதையடுத்து ராம்ராஜ் என்னும் வழக்கறிஞர் ராம்குமாருக்காக ஆஜராகவுள்ளார்.

சுவாதியை கொலை செய்தது ராம்குமார்தான் என்பதை நேரடியாக கண்டவர் என யாரையும் காவல்துறை அடை யாளம் காணவில்லை. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல் துறை வெளியிட்ட புகைப் படத்தில் உள்ள நபரை போலவே, சூளைமேடு ஏ.எஸ்.மேன்ஷனில் ஒருவர் தங்கியிருந்ததாக அதன் காவலாளி கோபால் கூறினார். அதன் அடிப்படையில் ராம்குமாரை காவல்துறை கைது செய்தது.

சுவாதியை கொலை செய்த தாக காவல்துறையிடம் ராம் குமார் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கவில்லை. இந்நிலையில், அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக, ஏ.எஸ்.மேன்ஷனில் தங்கி இருப்பவர்களிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக ஏ.எஸ்.மேன்ஷ னில் தங்கியிருக்கும் இளைஞர்கள் சிலர் கூறும்போது, “ராம்குமார் கைது செய்யப்பட்ட நாள் முதல் எங்கள் மேன்ஷனை காவல்துறை தனது கட்டுப்பாட்டில் வைத் துள்ளது. ராம்குமாரின் ஊர்க் காரர்கள், உறவுக்காரர்கள் என 8 பேர் எங்கள் மேன்ஷனில் உள்ளனர். இது, போலீஸ் விசா ரணையின் போதுதான் எங்களுக்கு தெரியவந்தது.

போலீஸார் வலியுறுத்தல்

சுவாதி கொலையான அன்று காலை 6.15 மணிக்கு ராம்குமார் மேன்ஷனில் இருந்து வெளியே சென்றதை பார்த்ததாக யாராவது கூறுங்கள் என்று போலீஸார் வலியுறுத்தி வருகின்றனர்.

சுவாதி கொலை செய்யப்பட்ட நாளில், ராம்குமாருடன் தங்கி யிருந்த நடேசன் என்னும் நபர் வேலைக்கு சென்றுவிட்டு காலை 7 மணி அளவில்தான் அறைக்கு வந்தார்.

ஆகவே, போலீஸாரே அவரை சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டனர். இது ஏனென்று புரியவில்லை” என்றனர்.

இது தொடர்பாக போலீஸ் விளக் கத்தை கேட்பதற்காக சம்பந்தப் பட்ட விசாரணை அதிகாரிகளை பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தபோதும், அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை.

SCROLL FOR NEXT