தமிழகம்

19 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை கலங்கரை விளக்கம் நாளை திறப்பு

செய்திப்பிரிவு

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் 19 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுமக்கள் பார்வைக்காக நாளை (வியாழக்கிழமை) காலை திறக்கப்படுகிறது. மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் இதைத் திறந்துவைக்கிறார்.

இதை முன்னிட்டு கலங்கரை விளக்கம் ரூ.1 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு ள்ளது. கலங்கரை விளக்கம் மற்றும் துறைமுகங்களின் செயல்பாடுகளை விளக்கும் வகையில் கலங்கரை விளக்கத்தின் தரைத்தளத்தில் அருங்காட்சியகம் ஒன்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கத்தின் உச்சியில் இரும்புவேலி போட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் வசதிக்காக புதிய லிப்டு வசதி செய்யப்பட்டுள்ளது.

புதுப்பொலிவுடன் காணப்படும் மெரினா கலங்கரை விளக்கத்தை பொதுமக்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையிடலாம்.

SCROLL FOR NEXT