தமிழகம்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து: 8,500 கன அடியாக அதிகரிப்பு

செய்திப்பிரிவு

கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழை, அணைகள் திறப்பு காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து விநாடிக்கு 8,500 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், அங்கு உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளின் நீர்மட்டம் வேக மாக அதிகரித்து வருகிறது. இத னால், அந்த அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீர் தமிழகத் துக்கு வந்ததை அடுத்து, ஒகேனக் கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து விநாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக இருந்தது. நேற்று காலை 8 மணியளவில் காவிரி ஆற்றில் நீர் வரத்து விநாடிக்கு 8,100 கனஅடியாக அதிகரித்தது. நேற்று மதியம் 2 மணியளவில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாடிக்கு 8 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் ஆர்ப்பரித்துச் சென்றது.

விடுமுறை நாளான நேற்று தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்று லாப் பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். பிரதான அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டி யதால் சுற்றுலாப் பயணிகள் உற் சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர்.

          
SCROLL FOR NEXT