தமிழகம்

முதல்வரைச் சந்திக்க நேரம் கோரி பார்வையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரதம்

எல்.சீனிவாசன்

முதல்வரைச் சந்திக்க நேரம் கோரி பார்வையற்ற பட்டதாரிகள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்துப் பேசிய பார்வையற்றோர் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம், ''2015 முதல் இன்று வரை தமிழக முதல்வரைச் சந்திக்க நேரம் கோரினோம். ஆனால் இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை. எனவே முதல்வர் எங்களை நேரில் அழைத்து எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்'' என்று கூறி பார்வையற்ற மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டம் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையின் முன் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

SCROLL FOR NEXT