சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி நேற்று பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மெரினாவில் ஜல்லிக்கட் டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திவரும் இளைஞர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடைபெறுவதை உறுதிசெய்து வருவதற்காகவும், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தாததற்காவும் அவர் களுக்கு பாராட்டுகளை தெரி வித்தாக வேண்டும். இந்தப் போராட்டம் வருங்கால தலை முறையினருக்கும், நாட்டுக்கும் முன்மாதிரியாக உள்ளது.
மேலும், அதிக அளவிலான கூட்டத்தை கட்டுப்படுத்த குறைவான போலீஸார் இருந்தாலும், மாணவர்களே கூட்டத்தை கட்டுப்படுத்தி வருவது ஆச்சரியமளிக் கிறது.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.