மின் கட்டண உயர்வு தொடர்பான மனுக்கள் மீது கருத்துகளை தெரிவிக்க விரும்புவோர், கருத்துகளை அனுப்புவதற்கான காலக்கெடு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணை யம், தானாக முன் வந்து முடிவெடுத் துள்ளது. இதுகுறித்து மின் கட்டணம் உயர்த்துவதற்கான உத்தேச கட்டணப் பட்டியலை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம், கடந்த செப்டம்பர் 23ல் வெளியிட்டது.
பொதுமக்கள் மற்றும் தொழில், வணிகத்துறையினர் தங்கள் கருத்துகளை கடிதங்கள் மூலம், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு, அக்டோபர் 23-க்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போது தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்தில் மக்கள் ஆர்வமாக இருப்பதால், மின்சார ஒழுங்குமுறை ஆணையத் துக்கு மிகக் குறைந்த அளவே கடிதங்கள் வந்துள்ளன. எனவே கருத்துக் கடிதங்களை அனுப்ப வேண்டிய காலக்கெடுவை அக்டோபர் 31 வரை நீட்டித்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.