தமிழகம்

சட்டப்பேரவை குழுக்கள் எப்போது அமைக்கப்படும்?- துரைமுருகன் கேள்வி

செய்திப்பிரிவு

சட்டப்பேரவை குழுக்கள் எப்போது அமைக்கப்படும் என எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேரவைத் தலைவரிடம் கேள்வி எழுப்பினார்.

சட்டப்பேரவையில் நேற்று நடை பெற்ற பொதுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் குறுக்கிட்ட துரைமுருகன், ‘‘சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு பெறு கிறது. ஆனால், சட்டப்பேரவை உறுப் பினர்களைக் கொண்டு அமைக்கப் படும் பல்வேறு ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்படவில்லை. அதுகுறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை. அது எப்போது வரும்?’’ என கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த பேரவைத் தலைவர் பி.தனபால், ‘‘உரிய நேரத் தில் சட்டப்பேரவை குழுக்கள் அமைக்கப்படும். அதற்கான அறிவிப்பு தகுந்த நேரத்தில் வெளியிடப்படும்’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ‘‘சட்டப்பேரவை குழுக்கள் அமைப் பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT