கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பை கருதி, தேர்வு செய்யப்பட்ட இடங்களில் 20 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக போக்கு வரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தீபாவளிப் பண்டிகையை யொட்டி, சொந்த ஊருக்கு செல்ல லட்சக்கணக்கான மக்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் திரள்வார்கள். அவர்களின் வசதிக்காக டிக்கெட் முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு ஆலோசனைகளை வழங்க உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
மேலும், பயணிகளின் பாது காப்புக்காக, பஸ் நிலையத்தின் உள்பகுதி, வெளிப்பகுதி, நடைமேடைகள் என தேர்வு செய்யப்பட்ட முக்கியமான இடங்களில் 20 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.