தமிழகம்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம், ''தமிழகத்தை பொருத்தவரை வெப்பச் சலனம் காரணமாக ஆங்காங்கே, ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி பாரன்ஹீட் ஆகவும் இருக்கும்.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக மதுரையில் 101.12 டிகிரி பாரன்ஹீட், சென்னையில் 96.98 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது'' என்று தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT