நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 121-வது மலர் கண்காட்சியை முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார். 22 ஆண்டு களுக்குப் பிறகு மலர் கண் காட்சியை முதல்வர் தொடங்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலாப் பயணிகளின் பார் வைக்காக 15 ஆயிரம் தொட்டி களில் மலர் அலங்காரம் காட்சிப் படுத்தப்படுகிறது. மேலும், பூங்கா வில் உள்ள புதுப் பூங்கா பகுதி யில் 6,000 வண்ண மலர்த் தொட்டி களின் பல வடிவங்கள் பார்வை யாளர்களை பரவசப்படுத்தின.
கண்காட்சியின் சிறப்பு அம்ச மாக ஒரு லட்சம் ரோஜா மற்றும் கார்னேசன் மலர்களைக்கொண்டு 25 அடி நீளம், 26 அடி உயரம் கொண்ட ‘மாமல்லபுரம் கடற் கரை கோயில் மாதிரி’ மற்றும் இருவாச்சி பறவை வடிவமைக்கப் பட்டிருந்தது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல்வேறு மலர்கள் தொகுப்பு, நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் கொய்மலர் அலங்காரம், அரிய வகை மலர் செடிகளின் தொகுப்பு, 5 முகப்பு மலர் அலங்கார வளைவுகள், ஆர்கிட்ஸ் மலர் களால் ஆன 5 அலங்கார வளைவு கள் மற்றும் பல்வேறு மலர்களின் அலங்காரங்கள், நெதர்லாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட டூலிப்ஸ் மலர்கள் ஆகியவை கண்ணுக்கு விருந்தாக அமைந்தன.
விழாவில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி, நிருபர்களிடம் கூறும் போது, “தமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்” என தெரிவித்தார்.
2 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.