வானிலை ஆய்வு மையம் தெரி வித்திருப்பதாவது:
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை புறநகரில் மழை
நேற்று இரவு சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், வேளச்சேரி, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், திருவொற்றியூர் போன்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.