இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து பாம்பன் குந்துகால் கடல் பகுதியில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் கண்காணித்தனர்.
ஒரு நாட்டுப் படகில் வந்த இரண்டு இளைஞர்களை பிடித்து பையை சோதனை செய்தபோது அதில் திரவ வடிவில் 6.4 கிலோ எடையுள்ள தங்கம் இருந்தது. பிடிபட்ட வர்கள் ராமேசுவரத்தைச் சேர்ந்த நாகரெத்தினம், ராமநாதன் எனத் தெரியவந்தது.
ராமநாதபுரம் பட்டணம் காத்தான் போலீஸ் சோதனைச் சாவடி அருகே ஆம்னி பேருந்தில் ஒரு இளைஞ ரிடம் 7.6 கிலோ தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.