தமிழகம்

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் நாளை டெல்லி பயணம்: பிரதமரை சந்திக்கவும் திட்டம்

செய்திப்பிரிவு

மத்திய திட்டக் கமிஷனுக்கு பதில் அமைக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் கூட்டம் டெல்லியில் வரும் 23-ம் தேதி நடக்கிறது. பிரத மர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில், நிதி ஆயோக் உறுப்பினர்களான மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமியும் இதில் பங்கேற்கிறார். இதற்காக அவர் நாளை (22-ம் தேதி) மாலை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

டெல்லி பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியை தனி யாக சந்தித்துப் பேசவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். அப் போது, தமிழக விவசாயிகள் போராட்டம் தொடர்பாகவும், ‘நீட்’ தேர்வில் விலக்கு கோருவது தொடர்பாகவும் பேச திட்ட மிட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப் படுகிறது. மேலும், அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை மற்றும் தமிழக அரசியல் குறித்தும் அவர்கள் பேசக்கூடும் என தெரிகிறது.

நிதி ஆயோக் கூட்டத்தில் பங் கேற்க உள்ளதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் அமைச் சர்களுடன் முதல்வர் நேற்று ஆலோ சனை நடத்தினார். பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, துரைக் கண்ணு, விஜயபாஸ்கர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் மத்திய அரசு திட்டங்கள், நிதி ஆயோக் கூட்டத்தில் கேட்டுப் பெற வேண்டிய துறை வாரியான நிதி மற்றும் நிவாரணம், ஜிஎஸ்டி வரி உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தலை மைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT