தமிழகம்

நாடு முழுவதும் அமல்படுத்தாத நிலையில் தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை: சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம்

செய்திப்பிரிவு

நாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்படாத நிலையில், தமிழகத்தில் மட்டும் அதற்கு சாத்தியமில்லை என்று அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதம் வருமாறு:

பார்த்தசாரதி (தேமுதிக): முன்மாதிரி மாநிலமாக தமிழகத் தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். ஒட்டுமொத்த மக்களின் நலனுக்காகவே இந்த கோரிக்கையை முன்வைக்கிறோம்.

அமைச்சர் விஸ்வநாதன்: பேரவையில் இக்கோரிக்கை பலமுறை எழுப்பப்பட்டு, அதற்கு நானும் விளக்கம் அளித்துவிட் டேன். மதுவின் தீமையை மற்றவர் களைவிட முதல்வர் நன்கு அறிவார். இருப்பினும், மது விலக்கு நடைமுறையில் சாத்திய மில்லை. இந்த விஷயத்தில் மதுவை அறிமுகம் செய்த திமுக தலைவர் கருணாநிதி சொன்ன பதிலையே நானும் இரவல் வாங்கிச் சொல்கிறேன். ‘கொழுந்து விட்டு எரியும் நெருப்பு வளையத்துக்குள் கற்பூரத்தை எப்படி பாதுகாப்பது?’.

துரைமுருகன் (திமுக): இப்போது மதுவிலக்கு கொண்டு வரப் போகிறீர்களா, இல்லையா?

அமைச்சர் விஸ்வநாதன்: அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு இல்லாதபோது தமிழகத்தில் அமல்படுத்தினால், அரசு கஜானாவுக்கு வரவேண்டிய வருவாய் கள்ளச்சாராயம் விற்போ ருக்கும் சமூக விரோதிகளுக்கும் போய்விடும். நாடு முழுவதும் மதுவிலக்கு கொண்டுவந்து, வருவாயை மத்திய அரசு ஈடுசெய் தால், முதல் மாநிலமாக மது விலக்கை ஆதரித்து தமிழக அரசு அமல்படுத்தும்.

சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): வருவாய்க்காகத் தான் மதுக்கடைகள் நடத்தப்படு கின்றதா?

அமைச்சர் விஸ்வநாதன்: மதுக் கடைகள் நடத்த பல காரணங்கள் உள்ளன. அதில் வருவாயும் ஒன்று. அருகில் உள்ள மாநிலங்கள் மதுவிலக்கை அமல்படுத்தாத தால், தமிழகத்திலும் அமல்படுத்த முடியவில்லை. இந்த விவகாரத் தில், திமுக தலைவர் கருணாநிதி பேசியதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ‘என் வீட்டு கோழி அடுத்த வீட்டில்போய் முட்டையிட அனுமதிக்கமாட்டேன்’. மது விலக்கு கொண்டு வந்தால் தமிழகத்துக்கு வர வேண்டிய வருவாய் அண்டை மாநிலத்துக் குப் போய்விடும். அதை எப்படி அனுமதிக்க முடியும்?

துரைமுருகன்: இந்த அரசிடம் மதுவிலக்கு கொள்கையை எதிர் பார்க்க முடியாது. அப்படித்தானே?

அமைச்சர் விஸ்வநாதன்: மதுவிலக்கு கொள்கைக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. மதுவிலக்கு கொள்கையை நாங்களும் ஏற்கிறோம்.

மு.க.ஸ்டாலின் (திமுக): உடனடியாக முழு மதுவிலக்கு கொண்டுவராவிட்டாலும், பிற மாநிலங்களைப்போல படிப்படி யாக கொண்டு வரலாம். அதற்கு இந்த அரசு நடவடிக்கைஎடுக்குமா?

டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோரும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர்.

சவுந்தரராஜன்: இந்தியாவிலே தமிழகத்தில்தான் அதிக மதுக் கடைகள் உள்ளன. இன்னமும் பல பள்ளிகள், மருத்துவமனைகள் அருகே மதுக்கடைகள் இயங்கு கின்றன.

அமைச்சர் விஸ்வநாதன்: பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் மதுக்கடைகள் எண் ணிக்கை குறைவுதான். மக்கள் கோரிக்கையை ஏற்று பள்ளி, மருத்துவமனை அருகே உள்ள மதுக்கடைகள் அகற்றப்படு கின்றன. அவ்வாறு ஏதாவது அகற்றப்படாமல் இருந்து, அரசின் கவனத்துக்கு கொண்டுவந்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மேற்கு வங்கத்திலும் கேரளா விலும் ஆட்சியில் இருந்தபோது மதுவிலக்கை கொண்டு வர வில்லை. தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்று கோருகிறீர்கள். உங்களுக்கு அங்கு ஒரு கொள்கை. இங்கு ஒரு கொள்கையா?

இவ்வாறு விவாதம் நடந்தது.

SCROLL FOR NEXT