பணிகள் அடிப்படையில் தமிழக வருவாய்த் துறையின் பெயர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை என மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அரசுக்கான வீட்டு வரி, நிலவரி உள்ளிட்டவற்றை கணக்கிட்டு அவற்றை பொதுமக்களிடம் இருந்து பெறும் துறை வருவாய்த் துறையாகும். இது தவிர, சான்றிதழ்கள் வழங்குதல், மாநிலத்தில் ஏற்படும் பேரிடர்களின்போது மக்களை காப்பதும், அவர்களுக்கான நிவாரணத்தை வழங்குவதும் இத்துறையின் பணிகளாகும்.
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி சுனாமி தாக்கியபோது, தமிழக அரசு சார்பில் மக்களுக்கான நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல், மத்திய அரசு மற்றும் உலக வங்கி, ஆசிய வள வங்கியின் ஆதரவுடன் தன்னார்வ தொண்டு அமைப்பு களும் நிவாரணப் பணியில் இறங்கின. வருவாய்த்துறை, இத்திட்டங் களை கண்காணித்து செயல்படுத்தியது
அரசாணை வெளியீடு
இதுபோன்ற பணிகளின் காரணமாக, நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில், வருவாய்த்துறை என்பது, ‘வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை’ துறை என அழைக் கப்படுகிறது. மாநிலத்தில் மிக முக்கியமான பணிகளை ஆற்றி வரும் வருவாய்த்துறையின் பெயரை தமிழகத்திலும் ‘வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை’ என மாற்ற பரிந்துரைக்கப்பட்டது. அரசு இப்பெயரை மாற்றி தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.