பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பழம்பெரும் திரைப்பட கலைஞர் ராஜேந்திரன் காலமான செய்தி தமிழக மக்கள் அனைவருக்குமே வருத்தமளிக்கக்கூடிய செய்தி. லட்சிய நடிகர் என்று லட்சியத்தை நடித்ததில் மட்டுமல்லாமல் வாழ்க்கையின் நடத்தையிலும் கடைபிடித்தவர்.
அரசியலில் திரைப்படக்கலைஞர்களும் ஈடுபட்டு கலை சேவையோடு மக்கள் சேவையும் ஆற்ற முடியும் என்று வெகு நாட்களுக்கு முன்பே நிரூபித்தவர்.
அழுத்தந்திருத்தமான வசனங்களை மக்கள் மனதில் அழுத்தமாகவும், ஆழமாகவும் விதைத்தவர்;. அவரின் மறைவு சிந்தனையில் கூட ஏற்றுக் கொள்ள முடியாதது.
அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.