தமிழக சட்டமன்றத்தில் இருந்து தேமுதிக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். அவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட தேமுதிக உறுப்பினர்கள் முயன்றனர். இதனையடுத்து தேமுதிக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இன்று சட்டமன்றத்தில், அதிமுக உறுப்பினர் விஜயபாஸ்கர் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக உறுப்பினர்களும் கடும் கூச்சல் எழுப்பினர்.
மேலும் அவையில் பேச தங்களை அனுமதிக்குமாறும் கூறினர். ஆனால் சபாநாயகர் மறுத்ததால், தேமுதிக உறுப்பினர்கள் அவரது இருக்கையை முற்றுகையிட்டனர்.
இதனால், தேமுதிக உறுப்பினர்களையும் அவையில் இருந்து வெளியேற்றுமாறு அவை பாதுகாவலர்களுக்கு தனபால் உத்தரவிட்டார்.