நாடு முழுவதும் கனிம மணல் அள்ளுவதைத் தடை செய்ய மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது என்று கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “கனிம மணல் அள்ளுபவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். கனிம மணல் அள்ளுவதற்கு, தமிழக அரசு விதித்துள்ள தடை வரவேற்கத்தக்கது. நாடு முழுவதும் கனிம மணல் அள்ளுவதைத் தடை செய்ய மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது” என்றார்.
கனிமக் குவாரிகளில் முறைகேடுகளை விசாரிப்பதற்காக, தமிழகம் முழுவதும் கார்னட், இல்மனைட் முதலான 71 பெருங்கனிம குவாரிகளின் செயல்பாடுகளை நிறுத்திவைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளது தொடர்பாக கேட்டதற்கு, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சேது சமுத்திர திட்டம் தொடர்பாக கேட்டதற்கு, “சேது சமுத்திர திட்டம், பழைய பாதையிலேயே நிறைவேற்றப்படும்” என்றார் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்.