திமுக தலைவர் கருணாநிதி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை, ஈரோடு, நாமக்கல், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் ஏராளமான கால்நடைகள் கோமாரி நோயால் இறந்துவிட்டன. மாநிலம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் கால்நடைகள் இறந்திருக்கின்றன. இறந்த கால்நடைகளுக்கு இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளுக்குச் சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று முதல்வர் அறிவித்து, ஒன்றரை மாதத்துக்கு மேலாகிறது. ஆனால், அரசாணை இன்னும் வராமல் மாற்றுத் திறனாளிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்று ‘தி இந்து’(தமிழ்) செய்தி வெளியிட்டுள்ளது.
மாணவர் வருகை குறைவு எனக் கூறி, ஈராசிரியர் பள்ளிகளை ஓராசிரியர் பள்ளிகளாகவும், ஓராசிரியர் பள்ளிகளை அறவே மூடிவிடவும் அரசு நடவடிக்கை எடுப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டு, மாணவர்களின் வருகையை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.