தமிழகம்

83 ஆயிரத்து 520 விவசாயிகளுக்கு ரூ.605 கோடி பயிர்க்கடன்: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்

செய்திப்பிரிவு

நடப்பாண்டில் 83 ஆயிரத்து 520 விவ சாயிகளுக்கு ரூ.604 கோடியே 88 லட்சம் பயிர்க்கடன் வழங்கப் பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.

கூட்டுறவுத்துறை செயல்பாடு கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் நடந்தது. கூட் டத்தில் அமைச்சர் பேசிய தாவது:

சிறு, குறு விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளால் வழங்கப் பட்ட ரூ.5 ஆயிரத்து 780 கோடியே 92 லட்சம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்து ஆணையிடப்பட்டுள்ளது. கடன் தள்ளுபடி வழிகாட்டு நெறி முறைகளுக்கு இணங்க பயனாளி களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது தவிர, கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளிலும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருவாயை பெருக்கவும் நடப்பாண் டில் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 31-ம் தேதி வரை 83 ஆயிரத்து 520 விவசாயிகளுக்கு ரூ.604 கோடியே 88 லட்சம் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில், 7 ஆயிரத்து 112 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.42.71 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் 46 கொள்முதல் மையங்கள் மூலம் கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது, செப்டம்பர் 6-ம் தேதி வரை 904 விவசாயிகளிடம் இருந்து ஆயிரத்து166 டன் கொப்பரை ரூ.6 கோடியே 94 லட் சத்துக்கு கொள்முதல் செய் யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் அனைத்து கூட்டுறவு வங்கிகளும் முழுமையாக தொழில் நுட்ப வசதிகளுடன் தேசியமய மாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளுக்கு இணையாக செயல்பட்டு வருகின்றன. புதிய தொழில்நுட்ப வசதிகள் கூட்டுறவு வங்கிகளில் ஏற்படுத்தப்பட்டதால் தற்போது 4 ஆயிரத்து 423 பொதுச்சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம் மையங்களில் மக்களுக்கு சாதி, பிறப்பு சான்றிதழ்கள், பட்டா, சிட்டா வழங்குதல் போன்ற பல்வேறு சேவைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் இதுவரை 18 ஆயிரத்து 446 டன் காய்கறிகள் ரூ.53 கோடியே 62 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளது. 106 அம்மா மருந்தகங்கள், 187 கூட்டுறவு மருந்தகங்கள் என 293 மருந் தகங்கள் மூலம் ரூ.377 கோடியே 11 லட்சத்துக்கு மருந்துகள் விற்கப் பட்டுள்ளன.

மேலும், நியாயவிலைக் கடை களில், பொருட்கள் முழுமையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு சென்றடையும் வகையில், புகார்கள் ஏதுமின்றி பணியாளர்கள் பணியாற்ற வேண்டும். தவறு செய்யும் பணியாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க அதி காரிகளுக்கு உத்தரவிடப்பட் டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் உணவு, கூட் டுறவுத்துறை செயலர் பிரதீப் யாதவ், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இரா.பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT