தமிழகம்

சுவாதி கொலையாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்: உறவினர்கள் எதிர்பார்ப்பு

செய்திப்பிரிவு

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வரை சட்டத்தின் முன் நிறுத்தி உச்சபட்ச தண்ட னையை பெற்றுத்தர வேண்டும் என்று அவரது பெற்றோர் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதியின் பெற்றோர் சார்பில், அவரது சித்தப்பா கோவிந்தராஜன், தாய்மாமா முகுந்தன் ஆகியோர் ஸ்ரீரங்கத்தில் நேற்று இரவு அளித்த பேட்டி:

சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்த தமிழக காவல்துறைக்கும், அரசுக்கும் எங்கள் குடும்பத் தின் சார்பில் நன்றி. மேலும், எங்களுக்கு ஆறுதல் சொன்ன அனைவருக்கும் நன்றி. அத்துடன், இந்த வழக்கை தன்னார்வ வழக்காக (சூமோட்டோ) ஏற்றுக்கொண்டு விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்துக்கும் நன்றி. தமிழகத்தில் மீண்டும் இதுபோன்ற அசம்பாவிதம் நடக்காத வகையில், பொதுமக்களாகிய நாம் முன்னின்று தடுத்து நிறுத்த வேண்டும். கண்ணெதிரில் நடைபெறும் குற்றங்களைத் தட்டிக் கேட்கவும், தடுக்கவும் முன்வர வேண்டும்.

மகளிர் பாதுகாப்புக்காக

சுவாதியின் இழப்பை, தேசிய அளவிலான மகளிர் பாதுகாப்புக்காக செய்யப்பட்ட உயிர் தியாகமாக எங்கள் குடும்பம் ஏற்றுக்கொள்கிறது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட குற்ற வாளியை சட்டத்தின் முன் நிறுத்தி உச்சபட்ச தண்டனையை வழங்க வேண்டும். குற்றங்களைக் குறைக்கவும், தடுக்கவும் இனிமேலாவது பள்ளிகளிலும், வீடுகளிலும் மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்புகளை கட்டாயம் சொல்லித்தர வேண்டும்.

சுவாதியின் இழப்பே, கடைசியாக இருக்கட் டும். இதை அரசியலாகவோ, ஜாதியாகவோ, மதமாகவோ நாம் கொண்டுசெல்லக் கூடாது. இது ஒரு குற்றம். அந்த கண்ணோட்டத்தில் மட் டுமே பார்க்க வேண்டும் என்பதை அனைத்துத் தரப்பினருக்கும் முக்கிய கோரிக்கையாக வைக் கிறோம். வழக்கு, விசாரணையில் உள்ளதால், இதற்குமேல் நாங்கள் எதுவும் சொல்ல விரும்பவில்லை. காவல்துறை மீது நம்பிக்கை இருந்தது. அதை செயல்படுத்திவிட்டனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT