தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் பி.எட். படிப்பில் 1,777 இடங்கள் ஒற்றைச்சா ளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
இந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேருவதற்கு ஆகஸ்டு 1-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250 மட்டும். அவர்கள் சாதி சான்றிதழ் நகலைச் சமர்ப்பிக்க வேண்டும்.
சென்னையில் திருவல்லிக் கேணி லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், சைதாப்பேட்டை கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் குமாரப்பாளையம், ஒரத்தநாடு, புதுக்கோட்டை, கோவை, வேலூர் காந்தி நகர் ஆகிய இடங்களில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளிலும், சேலம் பேர்லாண்ட்ஸ் ஸ்ரீ சாரதா கல்வியியல் கல்லூரி, மதுரை தியாகராசர் பர்செப்டார் கல்லூரி, தூத்துக்குடி வஉசி கல்வியியல் கல்லூரி, பாளையங்கோட்டை செயின்ட் இக்னேஷியஸ் கல்வி யியல் கல்லூரி, திருவட்டாறு ஆத்தூர் என்விகேஎஸ்டி கல்வி யியல் கல்லூரி ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
ஏற்கெனவே அறிவிக்கப் பட்டபடி, விண்ணப்பங்கள் பெற இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும். காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விண்ணப் பங்களை வாங்கிக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 10-ம் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணிக்குள் சென்னையில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.