தமிழகம்

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

செய்திப்பிரிவு

ராமேசுவரம் மற்றும் புதுக் கோட்டை மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் நேற்றுமுன்தினம் இரவு சிறை பிடித்தனர். அவர்களது 3 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்த னர்.

ராமேசுவரத்தில் இருந்து 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் காலை மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு தனுஷ்கோடிக்கும், கச்சத் தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பத்துக்கும் மேற்பட்ட ரோந்துப் படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடிக்கக்கூடாது என மிரட்டியுள்ளனர்.

மேலும் தனுஷ்கோடி அருகே மாதகல் பகுதியில் மீன் பிடித் துக் கொண்டிருந்த ராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவருக்குச் சொந்தமான படகை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைப் பற்றினர். அதில் இருந்த ராமேசு வரம் மீனவர்கள் ஆரோக்கிய தாஸ்(43), சைமன்(40), வழிவிட் டான்(40), முத்துப்பாண்டி(24), ரஞ்சன்(59) ஆகிய 5 பேரையும் சிறைபிடித்தனர்.

இந்த மீனவர்களின் படகு அருகே 136 கிலோ கஞ்சாவுடன் நின்றிருந்த இலங்கை நாட்டுப் படகை அந்நாட்டு கடற்படையினர் பிடித்தனர். இந்த கஞ்சாவை ராமேசுவரம் மீனவர்கள் தங்கள் படகில் கொண்டு வந்திருப்பார் களா? என்கிற சந்தேகத்தில் ராமேசுவரம் மீனவர்கள் 5 பேரை யும் விசாரணைக்காக கொழும் புக்கு அழைத்துச் சென்றனர்.

இதைத் தொடர்ந்து தலை மன்னார் லைட்ஹவுஸ் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரத்தைச் சேர்ந்த சக்தி வேல் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகையும் பிடித்துச் சென்றனர்.

அதில் இருந்த மீனவர் கள் பால்ராஜ்(55), நாகநாதன்(30), ராஜூ(35), முருகன்(27), உத் ராம்(35), முருகன்(50) ஆகிய 6 பேரையும் கைது செய்து மன்னார் கடற்படை முகாமில் வைத்து விசாரித்தனர்.

மேலும் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தைச் சேர்ந்த ஒரு படகையும், அதில் இருந்த ஜலாலுதீன்(50), எஸ்.ராசு(62) மற்றும் என்.அஷார்(40) ஆகி யோரை நேற்று முன்தினம் கைது செய்து, காங்கேசன் துறைமுகத் துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே நாளில் தமிழக மீனவர் கள் 14 பேரை இலங்கை கடற் படையினர் சிறைபிடித்திருப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT