தமிழகம்

மதுபானம் மீதான வாட் வரி உயர்வு: பேரவையில் மசோதா தாக்கல்

செய்திப்பிரிவு

டாஸ்மாக் மதுபானங்களுக்கு 5 சதவீத வாட் வரி உயர்த்தப்பட்டுள் ளது. இதற்கான சட்டத்திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவையில் நேற்று வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அறிமுகம் செய் துள்ள சட்டத் திருத்த மசோதாவில் கூறியிருப்பதாவது:

குஜராத், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மத்தியப் பிர தேசம் போன்ற மாநிலங்களில் மதிப்பு கூட்டுவரி சட்டங்களில் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்க வழிமுறை உள்ளது. தமிழகத்தில் அவ்வாறு ஏது மில்லை.

மாநிலத்தின் வருவாயை பெருக்கும் விதமாக, மனித நுகர்வுக்கான அனைத்து மது பானங்களின் மாநிலத்துக்குள் ளான விற்பனையில் வரி விதிக்கத் தக்க விற்று முதல் மீது 5 சதவீதத் துக்கு மிகாமல் கூடுதல் வரி விதிக்க கடந்த 2016 ஏப்ரல் 1-ம் தேதி முன்தேதியிட்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மசோதாவில் கூறப் பட்டுள்ளது.

மேலும், சமீபத்தில் பெட்ரோல் மீது 34 சதவீதம், டீசல் மீது 25 சத வீதம் என மதிப்புக் கூட்டு வரியை தமிழக அரசு உயர்த்தியது. இதற்கான சட்டத்திருத்த மசோதா வையும் அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று அறிமுகப்படுத் தினார். மாநில வருவாயை பெருக்கவே, இந்த வரி உயர்வு என்று அமைச்சர் தெரிவித் துள்ளார்.

SCROLL FOR NEXT