தமிழகம்

பத்திரப் பதிவுத் துறையில் பழைய பதிவு கட்டணத்தையே அமல்படுத்த வேண்டும்: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

நிலம், கட்டிடம் ஆகிய சொத் துக்களை விலை கொடுத்து வாங்கும்போதும், குத்த கைக்கு ஒப்பந்தம் செய்யும் போதும் முறைப்படி பத்திரப் பதிவு செய்து கொள்ள வேண் டியது அவசியம். பத்திரப்பதி வின்போது சொத்தின் மதிப்பு, அரசு நிர்ணயம் செய்துள்ள வழி காட்டி மதிப்பு ஆகியவற்றை ஒப்பிட்டு அதற்கேற்ப முத்திரைத்தாள் கட்டணம் அமையும்.

தமிழகத்தில் கடந்த சில வருடமாக பத்திரப்பதிவு செய் வதில் பல்வேறு குளறுபடிகள் இருந்த காரணத்தால் பத்திரப் பதிவு முறையாக நடைபெற வில்லை. இது சம்பந்தமாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு பத்திரப்பதிவு தொடர்பாக அரசாணைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதிலும் பல்வேறு குளறுபடி கள் இருந்தன.

இருப்பினும் தமிழக அரசு சமர்ப்பித்த அரசாணைப்படி பத்திரப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவையும் தமிழக அரசு முறையாக நடை முறைப்படுத்தவில்லை. தமிழக அரசு பத்திரப்பதிவு தொடர்பாக தற்போது ஓர் புதிய அறிவிப்பை வெளியிட்டு, அமல்படுத்த உள்ளது.

அதன்படி பத்திரப்பதிவு முறையில் வழிகாட்டி மதிப்பை குறைப்பது போல் குறைத்து, பதிவு கட்டணத்தை அதிகரித்துள்ளது. இதனால் பாதிக்கப்படுவது ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தான். அரசுக்கு வருவாய் வேண்டும் என்பதற்காக பொது மக்கள் மீது சுமையை ஏற்றுவது நியாயமில்லை. எனவே தமிழக அரசு பத்திரப் பதிவுக்கு புதிய வழிகாட்டி மதிப்பையும், பழைய பதிவுக் கட்டணமான ஒரு சதவீத மதிப்பையும் அமல்படுத்திட வேண்டும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT