தமிழக உள்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இரவு நேரத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பசலனம் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய் துள்ளது. அதிகபட்சமாக ஓசூரில் 140 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது.
குந்தா அணை, அரண்மனைப்புதூர், குன்னூர், க.பரமத்தி, ஆண்டிபட்டி, முசிறி, கொடுமுடி ஆகிய இடங்களில் தலா 50 மில்லி மீட்டர், குடியாத்தம், மாயனூர், மதுரை விமான நிலையம், தாத்தையங்கார்பேட்டை, துறை யூர், பேச்சிப்பாறை ஆகிய இடங்களில் தலா 40 மில்லி மீட்டர், அம்பாசமுத்திரம், முதுகுளத் தூர், பரமத்திவேலூர், கொடைக் கானல், குழித்தலை, கோத்தகிரி, சேரன்மகாதேவி, நத்தம், சோழ வந்தான், கடவூர், தோகமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் தலா 30 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
“அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) வெப்பசலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும்.
தமிழக உள்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப் படும். மாலை அல்லது இரவு நேரத்தில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக் கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.