தமிழகம்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை கூடுகிறது

செய்திப்பிரிவு

தமிழக அமைச்சரவையின் அவசரக் கூட்டம் புதன்கிழமை (ஜனவரி 4-ம் தேதி) கூடுகிறது.

தலைமைச் செயலகத்தில் காலை 9 மணி அளவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் நிலவும் வறட்சி நிலை, விவசாயிகள் மரணம், ஜல்லிக்கட்டு விவகாரம், பட்ஜெட் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, விவசாயிகளைப் பாதுகாக்கும் கடமையை தமிழக அரசு செவ்வனே நிறைவேற்றும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார்.

மேலும், பயிர் நிலைமைகள் குறித்து உயர்மட்டக்குழு அறிக்கை அளித்தவுடன், பயிர் பாதிப்புக்கு உரிய நிவாரணத் தொகையை அரசு வழங்கும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இந்நிலையில் தமிழக அமைச்சரவையின் அவசரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT