எடப்பாடி பழனிசாமி தலைமை யிலான புதிய அமைச்சரவை பதவி யேற்பு விழாவில் பங்கேற்பதற் காக கூவத்தூர் தனியார் விடுதி யில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்கள் வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர். விழா மண் டபத்தில் அவர்களுக்கு 4 வரிசை இருக்கைகள் ‘ரிசர்வ்’ ஆக வைக் கப்பட்டிருந்தன. அவற்றில் 4.30 மணிக்கு எம்எல்ஏக்கள் அமர வைக்கப்பட்டனர். அப் போது அமைச்சர்கள் விஜயபாஸ் கர், உடுமலை ராதா கிருஷ் ணன் மற்றும் கொறடா ராஜேந்திரன் ஆகியோர் எம்எல்ஏக் களை எண்ணிப் பார்த்தனர். 2 எம்எல்ஏக்களை காணவில்லை என்றதும் பதறினர். அவர்கள் வெளியே நின்றிருப்பது தெரிந்த தும், உடனடியாக அழைத்து வந்து அமரவைத்தனர்.
விழாவில் அதிமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த கு.தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), கருணாஸ் (முக்குலத்தோர் புலிப் படை), தமிமுன் அன்சாரி (மனித நேய ஜனநாயக கட்சி) ஆகிய 3 எம்எல்ஏக்களும் பங்கேற்றனர். மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ ஆர்.நட்ராஜ், விழாவில் பங்கேற்க வில்லை.