அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக தேர்தல் ஆணையத் துக்கு சசிகலா பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக, 14-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என ஓபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயல லிதா மறைவுக்குப் பின் அதிமுக வின் பொதுச்செயலாளராக சசிகலா தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், பொதுச் செயலாள ராக சசிகலா நியமிக்கப்பட்டது செல் லாது என அறிவிக்கக் கோரி தேர் தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல் வம் ஆதரவு எம்.பி.க்கள் மனு அளித் தனர். இந்த மனுவுக்கு பதிலளிக்கும் படி சிறையில் இருக்கும் சசி கலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து, கடந்த பிப்ரவரி 28-ம் தேதி சசிகலா சார்பில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதில் அனுப்பினார். ஆனால், தேர்தல் ஆணையத்தின் ஆவணங்கள்படி தினகரனுக்கு எவ்வித பொறுப்பும் இல்லை என்பதால் அவரது பதிலை ஏற்க ஆணையம் மறுத்துவிட்டது. மேலும், சசிகலா பதிலளிக்க மார்ச் 10 வரை அவகாசம் அளித்தது.
இதைத் தொடர்ந்து, கடந்த 10-ம் தேதி தேர்தல் ஆணையத்தின் கேள்விகளுக்கு பதிலளித்து தனது கடிதத்தை வழக்கறிஞர்கள் மூலம் சசிகலா அனுப்பினார். அதில், அதிமுக சட்ட விதிகள்படியே பொதுச்செயலாளர் நியமனம் நடந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சசிகலாவின் பதி லுக்கு விளக்கம் அளிக்கும்படி ஓபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணை யம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாளைக்குள் (14-ம் தேதி) பதிலளிக் கும்படி தேர்தல் ஆணையம் அறிவு றுத்தியுள்ளது.
இது தொடர்பாக, ஓ.பன்னீர்செல் வம் வீட்டில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மதுசூதனன், பி.எச்.பாண்டியன், நத்தம் விஸ்வநா தன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், செம்மலை, பாண்டிய ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.