ரம்ஜான் நோன்புக் கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 4 ஆயிரத்து 600 டன் பச்சரிசி மொத்த அனுமதி மூலம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிறுபான்மையின மக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்படு கின்றன. புனித ரம்ஜான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரிக் கப்படுகிறது. இதற்காக பள்ளி வாசல்களுக்கு அரிசி வழங்க தேவையான அனுமதி வழங்க கடந்த 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி உத்தரவிட்டேன். அதன்படி பள்ளிவாசல்களுக்கு தேவையான அரிசி வழங்க அனு மதி அளிக்கப்பட்டு வருகிறது. இது இஸ்லாமிய மக்களிடம் ஏகோ பித்த வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என இஸ்லாமிய மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. அவர்கள் கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டும் நோன்புக் கஞ்சி தயாரிக்க, அரிசிக்கான மொத்த அனுமதி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
பள்ளிவாசல்களுக்கு தேவை யான அரிசியை மொத்த அனுமதி மூலம் வழங்க மாவட்ட ஆட்சியர் களுக்கு தக்க அறிவுரை வழங்கப் படுகிறது. இதன்படி, 4 ஆயிரத்து 600 மெட்ரிக் டன் பச்சரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல் களுக்கு வழங்கப்படும், இதனால் அரசுக்கு ரூ.2 கோடியே 14 லட் சம் செலவாகும். இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 3 ஆயிரம் பள்ளிவாசல்கள் பயன டையும்.
இவ்வாறு அறிக்கையில் ஜெய லலிதா தெரிவித்துள்ளார்.