தமிழகம்

மருத்துவ மாணவிகள் உயிரிழந்த விவகாரம்: எஸ்விஎஸ் கல்லூரி ஆவணங்களை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சி அருகே உள்ள எஸ்.வி.எஸ் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் கடந்த ஜனவரி 23-ம் தேதி மர்மமான முறையில் இறந்தனர்.

இதில் தொடர்புடையதாக கல்லூரி தாளாளர் வாசுகி, அவரது மகன் சுவாகர்வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி, ஊழியர் வெங்கடேசன் ஆகியோர் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, கைது செய்து விசாரணை நடத் தினர்.

இந்த வழக்கில், வாசுகி உள்ளிட்ட 4 பேரும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். முன்னதாக, கல்லூரியின் ஆவ ணங்களை கைப்பற்றிய சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கல்லூரி ஆவ ணங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கல்லூரி தாளாளர் வாசுகி தரப்பில், விழுப் புரம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. நீதிபதி சுபா அன்புமணி விசாரணை நடத்தினார்.

இதில், கல்லூரியில் கைப்பற்றப்பட்ட செல்போன்கள் தவிர மற்ற ஆவணங்களை மீண் டும் கேட்கும்போது மனுதாரர் ஒப்படைக்க வேண்டும் எனவும், தற்போது ஆவணங்களை மனுதாரரிடம் ஒப்படைக்க வேண் டும் என்று சிபிசிஐடி போலீஸுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT