தமிழகம்

தமிழகத்தில் பூண்டு விலை கடும் உயர்வு: ஒரு கிலோ ரூ.450-க்கு விற்பனை

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தமிழகத்தில் பூண்டு விலை ரூ.450 வரை விற்பதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

இந்தியாவில் மகாராஷ்டிரம், குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவு பூண்டுகள் விளைவிக்கப்படுகின்றன. இங்கு உற்பத்தியாகும் பூண்டு நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் கொடைக்கானல், கவுஞ்சி, போலூர், கிளாவரை, கூக்கால், குண்டுப்பட்டி, மன்னவனூர் உள்ளிட்ட பகுதி யில் அதிகளவு பூண்டுகள் விளைவிக்கப்படுகின்றன. பூண்டில் மலைப் பூண்டு, அடுக்குப் பூண்டு, இமாசலப்பிரதேசப் பூண்டு, சைனா பூண்டு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பூண்டு வகைகள் உள்ளன. ஆனால், இவற்றில் மலைப் பூண்டுகளுக்கே நாடு முழுவதும் அதிக வரவேற்பு உண்டு. மதுரையில் 3 இடங்களில் மொத்த கொள்முதல் பூண்டு குடோன்கள் உள்ளன. தற்போது தமிழகம் முழுவதும் பூண்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மாட்டுத்தாவணி சந்தையில் நேற்று ஒரு கிலோ மலைப்பூண்டு 450 ரூபாய்க்கு விலை இருந்தது. பூண்டுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்த விலை மேலும் உயரும் என்பதால் பொதுமக்கள் கவலை யடைந்துள்ளனர்.

இதுகுறித்து மதுரை மாட்டு த்தாவணி வியாபாரிகள் சங் கத் தலைவர் பாக்கியராஜ் கூறியது: தமிழகத்துக்கு இமா சலப்பிரதேசத்தில் இருந்து அதிகளவு பூண்டு விற்பனைக்கு வருகிறது. தற்போது இந்த பூண்டுகள் பதுக்கப்படுவதால் விலைகள் திடீரென உயர்ந்துள்ளன. கடந்த மாதம் 320 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ மலைப் பூண்டு தற்போது 450 ரூபாய்க்கு விற்கிறது. 100 ரூபாய் விற்ற சைனா பூண்டு 180 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கும், இமாசலப்பிரதேச பூண்டு 120 ரூபாய்க்கும், நாட்டுப் பூண்டு, 60 ரூபாய், 70 ரூபாய், 80 ரூபாய்க்கும் விற்கிறது. ஆனால், அனைவரும் மலைப்பூண்டையே விரும்புவதால் இந்த விலை உயர்வு கவலையளிக்கிறது என் றார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் வடுகபட்டி ஜெயமங்கலம் வியாபாரி பரமேசுவரன் கூறுகையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இந்த ஆண்டு நாட்டு மலைப்பூண்டு விளைச்சல் அதிகமாகியுள்ளது. ஆனால் இந்த பூண்டு விற்பனைக்கு செல்லாமல் விதைக்காக ஹரியா ணா, இமாசலப்பிரதேசம், மத்திய ப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட வெளிமாநில வியாபாரிகள் கொள் முதல் செய்துவிட்டனர். அதனால், விளைச்சல் இருந்தபோதும் தட்டுப் பாடு நிலவுவதால் கொடைக் கானல் மலைப்பகுதியில் விளை யும் பூண்டு ரூ.250 முதல் ரூ. 450 வரை விற்கப்படுகிறது என்றார்.

SCROLL FOR NEXT