தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 50 லட்சம் குழந்தைகளுக்கு தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் இது தொடர்பாக திமுக உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா (ஆலங்குளம்), கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசி னார். அதற்கு பதிலளித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:
தமிழகத்தில் தற்போது தடுப்பூசி களின் மூலம் 9 வகையான நோய் கள் தடுக்கப்படுகின்றன. இத்துடன் ரூபெல்லா நோயை தடுக்க தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி போடப்படுகிறது. தேசிய தடுப்பூசி திட்ட நிபுணர்கள் குழுவின் பரிந் துரைப்படி தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கோவா, லட்சத்தீவு ஆகிய மாநிலங்களில் முதல்கட்ட மாக 9 மாதம் முதல் 15 வயதுக்குட் பட்ட அனைத்து குழந்தைகளுக் கும் இந்த தடுப்பூசி போடப்படு கிறது.
இந்த தடுப்பூசி, தட்டம்மை மற்றும் ரூபெல்லா எனப்படும் வைரஸ் கிருமிகளுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக் கக்கூடிய சக்தி வாய்ந்தது. ‘இந்த தடுப்பூசி புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகிறது. இது 100 சதவீதம் பாது காப்பானது என உலக சுகாதார நிறுவனம் சான்றிதழ் வழங்கியுள் ளது. இது குறித்த தவறான தகவல் களை யாரும் நம்ப வேண்டாம்’ என உலக சுகாதார நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதி டாக்டர் ஹெங்க் பெக்டேம் கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பரப்பப் பட்ட வதந்திகளையும் மீறி தமிழகத் தில் வெற்றிகரமாக இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மக்க ள்தொகை கணக்கெடுப்பின்படி 1 கோடியே 76 லட்சம் குழந்தை களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 1 கோடியே 50 லட்சம் குழந்தை களுக்கு தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 2020-க்குள் தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய்களை முற்றி லும் கட்டுப்படுத்துவதே அரசின் நோக்கமாகும். ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த தடுப்பூசி வழக்கமான தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.