சென்னையில் விதிமீறி கட்டிடம் கட்டியவர்களின் மேல்முறையீடு களை விசாரிக்க வீட்டுவசதி துறையில் கூடுதல் செயலாளர் அந்தஸ்தில் புதிய பணியிடம் உருவாக்கப்பட்டிருப்பதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித் துள்ளது.
சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி ரமேஷ், நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக் கறிஞர் எஸ்டிஎஸ்.மூர்த்தி ஆஜ ராகி, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை கடந்த 3-ம் தேதி பிறப்பித்த அரசாணையை தாக்கல் செய்தார். அதில், ‘விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டிய உரிமை யாளர்களின் மேல்முறையீடு களை விசாரிக்க வீட்டுவசதி துறையில் கூடுதல் செயலாளர் (தொழில்நுட்ப பிரிவு) என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) தலைமை திட்ட அதிகாரி ஒருவர் அப்பதவி யில் நியமிக்கப்படுவார். விதி மீறிய கட்டிட விவகாரங்கள் தொடர்பாக அவர் தொழில்நுட்ப அறிவுரைகளை வழங்குவார்’ என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதி கள் ஜூன் 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.