தமிழகம்

விவசாயிகள் செத்து மடிவது சமூகத்துக்கு அவமானம்: சகாயம் ஐஏஎஸ் கருத்து

செய்திப்பிரிவு

விவசாயிகள் செத்து மடிவது சமூகத்துக்கு அவமானம் என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கூறியுள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள ஒரு பள்ளியில் தனியார் அமைப்பு சார்பில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் திங்கட்கிழமை நடைபெற்றன. இதில் சிறப்பு விருந்தினராக சகாயம் ஐஏஎஸ் பங்கேற்றார்.

அதற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''நாம் எல்லோரும் உணவு உண்கின்றோம். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் ஆவர். நமக்கெல்லாம் உணவு கொடுக்கின்ற விவசாயிகள் செத்து மடிவது சமூகத்திற்கு அவமானம். விவசாயிகளின் கோரிக்கைகள் எங்கிருந்தாலும் வெல்ல வேண்டும்.

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்'' என்றார்.

SCROLL FOR NEXT